’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 12-Sep-2015 2:19 PM IST VRC கருத்துக்கள்

வருகிற விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு (செப்டம்பர்-17) பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மாயா’, கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள ‘49-ஓ’ மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களுடன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ‘ரஜினி முருகன்’ படத்தின் வெளியீட்டை திடீரென்று தள்ளி வைத்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘ரஜினி முருகன்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதால் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அந்த படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால் விநாயக சதுர்த்திக்கு நயன்தாராவின் ‘மாயா’, ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கவுண்டமணியின் ‘49-ஓ’ மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;