புதுமுகங்கள் நடிக்கும் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை’

புதுமுகங்கள் நடிக்கும் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை’

செய்திகள் 12-Sep-2015 12:49 PM IST VRC கருத்துக்கள்

கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் சொல்லப்படும் காதல் கதையாம் 'யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை' படம். தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரில் அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் இயக்கியுள்ள படம் இது.

இப்படத்தில் கதையின் நாயகனாக விஜய் ஆர். நாகராஜ் நடிக்க நாயகியாக ப்ரியா மேனன் நடித்துள்ளார். இருவருமே புதுமுகங்கள். இவர்களுடன் சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், , ஹலோ கந்தசாமி, வெங்கல்ராஜ், போண்டாமணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் சுவமிராஜ் குறும்போது,

‘‘இப்படத்தில் இரண்டு ஊர்கள் கதாபாத்திரங்கள் போல வருகின்றன. இரண்டு ஊர்களுக்கு இடையில் ஜென்ம பகை! எலியும் பூனையுமாக அந்த ஊர்க்காரர்கள் இருக்கிறார்கள். பகையான ஊர்களிடையே உறவாட வருவது போல காதலர்கள் உருவாகிறார்கள். அதாவது எலியும் பூனையுமாக உள்ள ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி உருவாகிறது .ஊர் பகை இவர்களின் காதலால் பெரிதானதா இல்லை மாறியதா என்பதே இப்படத்தின் கதை’’ என்றார்.

KDFC கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஆதிஸ் உத்ராயன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை கிச்சாஸ் ,வெண்ணிலா சரவணன் கவனித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிக் எஃப்.எம்.மில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;