ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‘யட்சன்’

ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‘யட்சன்’

செய்திகள் 12-Sep-2015 11:43 AM IST VRC கருத்துக்கள்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா முதலானோர்ர் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘யட்சன்’. ஆனந்த விகடன் பத்திரிகையில் சுபா எழுதி தொடராக வந்த கதையை தான் விஷ்ணுவர்த்தன் யட்சனாக இயக்கியிருக்கிறார். இப்படம் வெளியான அன்றே, அதாவது நேற்று ‘யட்சன்’ படத்தின் திரைக்கதை புத்தகமும் வெளியிடப்பட்டது. ஒரு படம் வெளியாகும் நாளிலேயே அப்படத்தின் திரைக்கதை புத்தமாக வெளியிடுவது இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நேற்று நடந்த விழாவில் இயக்குனர் விஷ்ணுவர்த்தன், எழுத்தாளர்கள் சுபா, நடிகர்கள் ஆர்யா, கிருஷ்ணா, ‘யுடிவி’ தனஞ்சயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘யட்சன்’ படத்தை ‘யுடிவி’ நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வந்த ‘யுடிவி’ நிறுவனம் ‘யட்சன்’ படத்துடன் தனது தமிழ் திரைப்பட தயாரிப்புக்கு ஒரு இடைவெளி விடுகிறது. அதாவது, தமிழில் ‘யுடிவி’ நிறுவனத்தின் கடைசி தயாரிப்பாக ‘யட்சன்’ அமைந்துள்ளது. இது குறித்து ‘யுடிவி’ தனஞ்சயன் கூறும்போது,
‘‘சில சமயங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு இடைவெளி தேவைப்படும்! அதைப்போல ‘யுடிவி’ நிறுவனமும் ‘யட்சன்’ படத்துடன் தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதில் ஒரு இடைவெளியை எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் இந்நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்புகள் தொடரும். மும்பையிலுள்ள யுடிவி நிர்வாகத்தினர் ‘யட்சன்’ படத்தை பார்த்து இதனை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளனர். ஹிந்தியிலும் விஷ்ணுவர்த்தனையே இயக்கச் சொல்லி கேட்டுள்ளனர். அதனால் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் விரைவில் கால் பதிக்கவுள்ளார் விஷ்ணுவர்த்தன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;