சென்சாருக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லும் இயக்குனர்!

சென்சாருக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லும் இயக்குனர்!

செய்திகள் 12-Sep-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா பற்றிய படம் ‘போர்களத்தில் ஒரு பூ’. இந்த படத்தை கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த் தமிழர் கணேசன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சாரில் தடை விதிக்கபட்டுள்ளது. இதனை எதிர்த்து கணேசன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் கணேசன். அப்போது அவர் கூறியதாவது.

‘‘நான் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த தமிழன்! கன்னட மொழியில் 6 படங்களை இயக்கியுள்ளேன். முதன் முதலாக நான் இயக்கிய தமிழ் படம் ‘போர்களத்தில் ஒரு பூ.’ இலங்கையில் நடந்த போரின்போது ஊடகவியலாளர் இசைப்பிரியா கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இந்த உலகுக்கு எடுத்து காட்டும் விதமாக ‘போர்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கினேன். இந்த படத்தில் இசைப்பிரியாவாக தான்யா நடித்திருக்கிறார். இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் என்னை இந்த படம் இயக்கத் தூண்டியது. இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள். அதை தொடர்ந்து படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கைக் குழுவிரும் படத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்கள். அதன் பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கி மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்கச் சொன்னர்கள். அதற்கு நான் மறுத்ததால் அனுமதி சாறிதழ் கொடுக்க மறுத்து படத்துக்கு தடை விதித்து விட்டார்கள். இந்த படம் இந்திய அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்றும் இந்த படத்தை வெளியிட்டால் இந்தியா - இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கைக் குழுவினர் காரணம் கூறுகிறார்கள்.

இதற்கு முன் இலங்கை சம்பவங்களை வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கு தணிக்கையில் அனுமதியும் கொடுத்துள்ளார்கள். நான் இயக்கியுள்ள இந்த படத்தில் தணிக்கைக் குழுவினர் நீக்கக் கூறும் காட்சிகளை போன்ற பல காட்சிகள் ஏற்கெனவே சென்சாரில் அனுமதி பெற்ற படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்த படங்களுக்கு எல்லாம் தணிக்கையில் அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால் நான் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனுமதி மறுத்துள்ளார்கள். இது எந்த விதத்தில் நியாயாம்? அதனால் நான் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;