நாடக தயாரிப்பிலும் கால் பதிக்கும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’

நாடக தயாரிப்பிலும் கால் பதிக்கும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’

செய்திகள் 10-Sep-2015 3:42 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் பல சாதனைகள் படைத்த நிறுவனம் இராம நாராயணனின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’. இராம நாராயணனின் மறைவுக்குப் பிறகு இந்த நிறுவனத்தை அவரது மகன் முரளி ராமசாமி திறம்பட நடத்தி வருகிறர். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை ரிலீஸ் செய்து வரும் இந்நிறுவனம் அடுத்து நாடகத் துறையிலும் கால் பதிக்கிறது. மேலை நாடுகளில் நாடகங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுவது போல நமது கலாச்சாரத்துடன் இணைந்த நாடகங்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடகத்துறையிலும் இறங்கியிருக்கிறார்கள் முரளிராமசாமியும், அவரது மனைவி ஹேமா ருக்மணியும்.
இவர்களது முதல் தயாரிப்பு ‘சில்லு’ என்ற நாடகம்! சென்னை நாடக ஆர்வலர்களுக்கு பரிச்சயமான ஸ்ரத்தா அமைப்பு மற்றும் அமெரிக்க விரிகுடா பகுதி நாடகக் குழுவான க்ரியாவுடன் இணைந்து ‘சில்லு’ என்ற நவீன அறிவியல் புனைவு நாடகத்தை வழங்க இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். இந்த நாடகத்தை தொடர்ந்து அடுத்த முயற்சியாக இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து ‘பட்டணத்தில் பூதம்’ என்ற நாடகத்தினை தயாரிக்கிறது. இது குழந்தைகளுக்கான நாடகம். இதில் பல திரைப்பட நடிகர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த நாடகங்கள் இம்மாதம் 10,11,12,13 ஆகிய தேதிகளில் சென்னையிலுள்ள நாரதகான சபாவில் நடைபெறவிருக்கிறது. திரையுலகை சேர்ந்தவர்களுக்காக வருகிற 12-ஆம் தேதி சனிக்கிழமை ’சில்லு’ என்ற நாடகம் சிறப்புக் காட்சியாக நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;