கதையே இல்லாத படம்! - சுரேஷ் கிருஷ்ணா!

கதையே இல்லாத படம்! - சுரேஷ் கிருஷ்ணா!

செய்திகள் 10-Sep-2015 12:43 PM IST VRC கருத்துக்கள்

‘‘நிஜமாக சொல்லணும்னா இது கதையே இல்லாத ஒரு படம். ஆனால் இப்படத்தில் எல்லாம் இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் கார்டிலேயே CONCEPT, DIRIECTION - லக்‌ஷ்மண் குமார் என்று தான் போட்டிருக்கிறார்கள். இப்படத்தை பொறுத்தவரை அது தான் பொருத்தம். நாம் சாதரணமாக ஒரு காஃபி ஷாப்புக்குப் போனால் அங்கு அதிகமாக பேசப்படும் விஷயம் சினிமா, அரசியல் அல்லது கிரிக்கெட்டாக தான் இருக்கும். அப்படி சினிமா குறித்து பொதுவாக பேசப்படுகிற விஷயங்களை தான் இப்படத்தின் இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் ‘மசாலா’ படமாக்கியிருக்கிறார்.

இது எந்த ஜானர் படம் என்று சொல்ல முடியாது. அனால் இது ஒரு புது ஜானர் படம். இப்படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை யாராலும் யூகிக்க முடியாது. யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸுடன் இப்படத்தை முடித்திருக்கிறார்கள். ‘மசாலா’ படத்தை பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் இப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும். நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி’’ என்றார் ‘மசாலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ‘பாட்ஷா’ பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் சினிமா குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் மற்றும் சினிமாவிற்குள் இருக்கும் விஷயங்களை இப்படத்தில் கையாண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘ALL IN PICTURES’ நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் ஒளிப்ப்திவு செய்து இயக்கியிருக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசை அமைத்துள்ளார். ‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கௌரவ், புதுமுகம் லக்‌ஷ்மி தேவி, பிரசாந்த், அர்ஜுன் சோமையாஜுலு, ஹரிணி, ஹைட் கார்த்தி, ஸ்ரீனி, தங்கதுரை, பிரபு என ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘மசாலா’ படத்தை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் உலகம் முழுக்க வெளியிடவிருக்கிறது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி டி.சிவா, தயரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, காஸ்மோ சிவா, ஆரா சினிமாஸ் மகேஷ் மற்றும் மசாலா பட குழுவினர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;