மாகாபா ஆனந்தின் ரியல் எஸ்டேட் பிசினஸ்!

மாகாபா ஆனந்தின் ரியல் எஸ்டேட் பிசினஸ்!

செய்திகள் 10-Sep-2015 10:28 AM IST Chandru கருத்துக்கள்

‘வானவராயன் வல்லவராயன்’ படம் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் ‘அது இது எது’ புகழ் மாகாபா ஆனந்த். இரண்டு ஹீரோக்களில் ஒருவராக மாகாபா நடித்திருந்த இப்படத்திற்குப் பிறகு சோலோ ஹீரோவாக ‘பஞ்சுமிட்டாய்’ படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘நவரச திலகம்’ எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுக இயக்குனர் கம்ரான் இயக்கும் இப்படத்தில் மாகாபாவிற்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக மாகாபா நடித்து வருகிறாராம். இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் ‘நவரச திலகம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

இப்படம் தவிர ‘அட்டி’, ‘தீபாவளி துப்பாக்கி’ என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாகாபா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடலை - டிரைலர்


;