‘யாத்ரீகனு’க்காக கிஷோர் புதிய அவதாரம்!

‘யாத்ரீகனு’க்காக கிஷோர் புதிய அவதாரம்!

செய்திகள் 9-Sep-2015 10:43 AM IST VRC கருத்துக்கள்

‘உலகமே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள்’ என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல ‘வாழ்க்கையே ஒரு பயணம்’ என்பார் கண்ணதாசன். அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வரும் படம் ‘யாத்ரீகன்’. இதில் கதையின் நாயகனாக கிஷோர் நடிக்கிறார். படத்தின் கதைப்படி கிஷோர் ஒருமுறை சிறை செல்ல நேர்கிறது. அடைப்பட்ட அந்த அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள், நிகழ்வுகள் பற்றி பல கேள்விள் எழுகின்றன! அந்த கேள்விகளுக்கான விடைகளை தேடி அவனை அலை கழிக்கின்றன. இப்படி கிஷோர் தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சில நேரம் சூழலே அவரை இழுத்துச் செல்கிறது. அலைகிறான். திரிகிறான். அதன் முடிவு என்ன? என்பதற்கு விடை தரும் படம் தானாம் ‘யாத்ரீகன்’.
இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்பட கல்லூரி மாணவர். இதில் வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறார் கிஷோர். இவருடன் சாயாசிங், ‘டூரிங் டாக்கீஸ்’ சுனுலட்சுமி, ‘கடல்’ சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளம், காங்க்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, காலிம்பான் போன்ற இடங்களில் நடந்து வருகிறது. இந்த இடங்கள் தவிர வேறு ஆறு இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.

ஏற்கெனவே ‘மூச்சு’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வி.வெங்கடேஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஜி.ரங்கராஜ் இசை அமைக்கிறார். சென்னையில் இசைப்பளி நடத்தி வரும் இவர் கர்நாகட இசையிலும் வல்லமை பெற்றவர். இப்படத்தை ‘நாக் ஸ்டுடியோஸ்’ சார்பில் சோமசேகர ரெட்டி தயாரித்து வருகிறார். இவர் பழம்பெரும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன் ஆவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;