‘போக்கிரி ராஜா’வில் ஜீவாவுடன் இணைந்த சிபிராஜ்!

‘போக்கிரி ராஜா’வில் ஜீவாவுடன் இணைந்த சிபிராஜ்!

செய்திகள் 9-Sep-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

ஜீவா ‘திருநாள்’ படத்திலும், சிபிராஜ் ‘ஜாக்சன் துரை’ படத்திலும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ‘போக்கிரி ராஜா’ படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ஜீவா, ஹன்சிகா நடிக்கும் இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இரண்டு ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் தற்போது சிபிராஜும் இணைந்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து 10 நாட்கள் பாண்டிச்சேரியிலும் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள். இம்மாத இறுதியில் ‘போக்கிரி ராஜா’வின் படப்பிடிப்பில் சிபிராஜ் கலந்து கொள்வாராம்.

‘போக்கிரி ராஜா’வுக்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;