‘ரஜினி முருகனு’க்கு எதிர்பார்த்த ரிசல்ட்!

‘ரஜினி முருகனு’க்கு எதிர்பார்த்த ரிசல்ட்!

செய்திகள் 8-Sep-2015 4:37 PM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இனைந்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்கவில்லையாம். அத்துடன் படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற ‘யு’ சர்டிஃபிக்கெட்டும் வழங்கியிருக்கிறார்கள். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘ரஜினி முருகன்’ பட டீம்! இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்க, முக்கிய கேரக்டர்களில் ராஜ்கிரண், சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;