மகேஷ் பாபுவை தொடர்ந்து பிரகாஷ் ராஜ்!

மகேஷ் பாபுவை தொடர்ந்து பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 8-Sep-2015 4:30 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தான் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ‘ஸ்ரீமந்த்துடு’ (தமிழில் - செல்வந்தான்) படத்தில் நடித்த வருமானத்தில் ஆந்திர மாநிலம் மெஹபூப் மாவட்டத்திலுள்ள புரிபாலேம் என்ற கிராமத்தை தத்து எடுத்தார். இதனை தொடர்ந்து இப்போது நடிகர் பிரகாஷ் ராஜும் அந்த மாவட்டத்திலுள்ள கொண்டாரெட்டி பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தை தத்து எடுக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இது சம்பந்தமாக ஆந்திராவின் பஞ்சாயத் ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தாரக் ராமாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் பிரகாஷ் ராஜ்! இதற்காக சமீபத்தில் ஒரு அறக்கட்டளையை துவங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த அறக்கட்டளை மூலம் அந்த கிராமத்தை அரசாங்க உதவியுடன் மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளாராம் பிரகாஷ் ராஜ். கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக கடந்த மாதம் தெலங்கானா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிராம ஜோதி திட்டத்தை பாராட்டியுள்ள பிரகாஷ் ராஜ், தனது அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஆந்திர அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளாராம். இது குறித்த தகவல்களை பிரகாஷ் ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;