நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

செய்திகள் 8-Sep-2015 4:11 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிற ஒரு விஷயம் நடிகர் சங்கத்திற்கான தேர்தல்! நடிகர் சங்கத்திற்கு வழக்கமாக நடைபெறும் தேர்தல் போல் இல்லாமல் இந்த வருட தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக முன்னாள் நீதியரசர் பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தேர்தல் மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், தேர்தல் குறித்த தகவலை நடிகர் சங்க உறுப்பினர்களுகு தபால் மூலம் அறிவிக்கப்படுமெ என்றும் அறிவித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி தயாராகி வருகிறது. இதனால் இந்த வருட நடிகர் சங்க தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;