‘திருசியம்’ வரிசையில் ‘தனி ஒருவன்’

‘திருசியம்’ வரிசையில் ‘தனி ஒருவன்’

செய்திகள் 8-Sep-2015 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, அரவிந்த் சாமி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதோடு நல்ல வசூலையும் அள்ளி வருவதால் இப்படத்தை மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்க பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறாது. ஏற்கெனவே ஹிந்தியில் இப்படத்தை ரீ-மேக் செய்து நடிக்க சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து நடிக்க ராம்சரண் விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதைப் போல கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான புனித் ராஜ்குமாரும் ‘தனி ஒருவனை’ கன்னடத்தில் ரீ-மேக் செய்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது தவிர தனி ஒருவனை மராத்தி, வங்காள மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்கவும் கேட்டு அணுகியுள்ளனராம். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’திருசியம்’. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து இப்போது ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, மோகன் ராஜா கூட்டணியில் அமைந்துள்ள ‘தனி ஒருவன்’ படமும் பல மொழிகளில் ரீ-மேக் ஆகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;