’புலி’க்காக குரல் கொடுத்த ஸ்ரீதேவி!

’புலி’க்காக குரல் கொடுத்த ஸ்ரீதேவி!

செய்திகள் 8-Sep-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

அடுத்த மாதம் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாம்! இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இதற்காக அவர் சென்னையில் பல நாட்கள் தங்கி ‘புலி’ டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்துள்ளார். ‘புலி’ திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. அதனால் தெலுகு, ஹிந்தி ,மொழிகளிலும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதேவி தமிழில் நடித்துள்ள நேரடி தமிழ் படம் ‘புலி’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய், ஸ்ரீதேவியுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சுதீப், பிரபு என பலர் நடித்துள்ளனர். சிம்பு தேவன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் சென்சாருக்கு செல்லவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;