மோகன்லாலுக்கு வில்லனாகும் கிஷோர்!

மோகன்லாலுக்கு வில்லனாகும் கிஷோர்!

செய்திகள் 8-Sep-2015 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘பொல்லாதவன்’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ உட்பட பல தமிழ் படங்கள் மற்றும் சில தெலுங்கு, கன்னட, மலையாள படங்களில் நடித்துள்ள கிஷோர் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘புலி முருகன்’. மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார் கிஷோர். இப்படத்தில் மிருகங்கள் நடமாடும் வன எல்லையை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழும் முருகன் என்ற வித்தியாசமான பாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த ஃபாரஸ்ட்டில் வில்லத்தனம் செய்யும் போலீஸ் அதிகாரியாக கிஷோர் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைக்கிறார். இவர் பணியாற்றும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டி நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ என்ற படத்தை இயக்கிய வைசாக் இயக்கும் இப்பம் இதுவரை மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வரும் படமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;