‘டிமான்டி’ நாயகன்! ‘டார்லிங்’ நாயகி!

‘டிமான்டி’ நாயகன்! ‘டார்லிங்’ நாயகி!

செய்திகள் 7-Sep-2015 3:54 PM IST VRC கருத்துக்கள்

‘டிமான்டி காலனி’ ‘ நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படங்களை தொடர்ந்து அருள்நிதி மலையாள ‘மெம்மரீஸ்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் என்ற தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். ‘ஈரம்’ பட புகழ் அறிவழகன் இயக்கும் இப்படத்தில் அருள்நிதியுடன் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா தத்தா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ‘திருசியம்’ படப் புகழ் ஜீத்து ஜோசஃப் இயக்கிய படம் ‘மெம்மரீஸ்’. இந்த படத்தில் பிருத்திவிராஜ் மதுவுக்கு அடிமையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் ஹீரோயின்களாக மியா ஜார்ஜ், மேக்னா ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ‘மெம்மரீஸ்’ படத்தை அருள்நிதி தயாரித்து, நடிக்க, அருள்நிதியுடன் ‘டிமான்டி காலனி’ படத்தின் தயாரிப்பில் இணைந்த ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இப்படத்தில் இணையவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;