ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’ புதிய தகவல்!

ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’ புதிய தகவல்!

செய்திகள் 7-Sep-2015 11:52 AM IST VRC கருத்துக்கள்

ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படம் தவிர ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் இயக்கத்திலும் ஜீவா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘போக்கிரி ராஜா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் ரொமாண்டிக், காமெடி, த்ரில்லர் ரக படமாம்!. இந்த படத்தில் ஜீவா, ஹன்சிகா ஜோடியாக நடிக்க, படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டாம். அதற்கான தேர்வு இப்போது நடந்து வருகிறது. ரஜினியின் ஒப்புதலோடு ‘போக்கிரி ராஜா’ என்று டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. வருகிற 10-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பை தொடர்ந்து, பாண்டிச்சேரியில் பத்து நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘போக்கிரி ராஜா’ குறுகிய கால தயாரிப்பாக உருவாக இருக்கிறதாம். இந்த படங்களை தொடர்ந்து ‘கவலை வேண்டாம்’ மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க இருக்கிறர் ஜீவா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;