ரிலீசுக்கு தயாராகும் மசாலா படம்!

ரிலீசுக்கு தயாராகும் மசாலா படம்!

செய்திகள் 4-Sep-2015 10:09 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘டெர்மினேட்டர்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ ஆகிய ஆங்கில படங்களை வெளியிட்ட ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் அடுத்து ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற படத்தை வெளியிட இருக்கிறது. இது இந்த நிறுவனம் வெளியிடும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வேறு மொழிப் படங்களை விநியோகம் செய்து வந்த இந்த நிறுவனம் இனி தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை வாங்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா முதலானோர் நடிப்பில் லக்‌ஷமன் இயக்கியுல்ள ‘மசாலா படம்’ படத்தின் விநியோக உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமூகவலைதளங்களில் சினிமாவை விமர்சிப்பவர்களுக்கும் அப்படி செய்யக் கூடாது என்று சொல்லும் திரை உலகினருக்கும் இடையே நடக்கும் வார்த்தை பிரதிவாதங்களை படம் பிடித்து காட்டும் படமே ‘மசாலா படம்’. விரைவில் இப்படம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;