வருடத்துக்கு 3 படங்கள் - ‘அதிபர்’ பட தயாரிப்பாளர் முடிவு!

வருடத்துக்கு 3 படங்கள் -  ‘அதிபர்’ பட தயாரிப்பாளர் முடிவு!

செய்திகள் 3-Sep-2015 3:57 PM IST VRC கருத்துக்கள்

ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அதிபர்’ இந்தப் படத்தை டி.சிவகுமார் தயாரித்திருந்தார். அவர் கூறும்போது, ‘‘எனது சொந்த வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கதையாக்கி ‘அதிபர்’ என்ற பெயரில் படம் எடுத்தோம். இந்த படம் மூலம் நான் கதாசிரியராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளேன். நம்பிக்கை துரோகம் எவ்வளவு வேதனையைத் தரும் என்று ‘அதிபர்’ படம் மூலம் சொன்னோம். அடுத்து சினிமா ஃபார்முலா படி பக்கா கமர்ஷியல் படங்களை தயாரிக்க உள்ளேன். பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களாக வருடத்துக்கு மூன்று படங்களை தயாரிக்க இருக்கிறோம். தற்போது அது சம்பந்தபட்ட வேலைகளில் நானும் எனது இணை தயாரிப்பாளரான சரவணனும் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;