ஸ்டிரைக் வாபஸ்... திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலீஸ்!

ஸ்டிரைக் வாபஸ்... திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலீஸ்!

செய்திகள் 3-Sep-2015 3:06 PM IST Chandru கருத்துக்கள்

‘பாயும் புலி’ பட ரிலீஸ் பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அதன்படி நாளைமுதல் புதிய தமிழ்ப் படங்கள் எதையும் வெளியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் தங்களது படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என பாயும் புலி, போக்கிரி மன்னன், சவாலே சமாளி ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அறிவித்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில், தமிழ்த்திரைலகைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடிப் பேசி நாளைமுதல் நடைபெறவிருந்த ‘ஸ்டிரைக்’கை வாபஸ் பெறுவதாகவும், அதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படங்கள் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

ஒருவேளை ‘பாயும் புலி’ படத்தை வெளியிடமாட்டோம் என்றுகூறி வந்த திரையரங்கங்கள் அப்படத்தை வெளியிடாவிட்டாலும், தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும், படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர்கள் குறித்து அதன்பின்னர் நடவடிக்கை எடுப்பது பற்றி அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடி ஆலோசனை செய்யும் என்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு அறிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;