தனி ஒருவனை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியின் மிருதன்!

தனி ஒருவனை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியின் மிருதன்!

செய்திகள் 3-Sep-2015 2:46 PM IST VRC கருத்துக்கள்

‘நாணயம்’ ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படத்தில் ‘ஜெயம்’ ரவி, லட்சுமி மேனன் நடிக்கிறார் என்ற செய்தியை ஏற்கெனவே நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த படத்திற்கு ‘மிருதன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை ‘நாடோடிகள்’, ‘கோரிப்பாளையம்’, ‘பட்டத்து யானை’ ஆகிய படஙக்ளை தயாரித்த ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் தற்போது அத்ரவா நடிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

அண்மையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ள ‘ தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிக்கும் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள். இப்படத்தில் ‘ஜெயம்; ரவி, லட்சுமி மேனனுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பேபி அனைகா, மற்றும் ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், சாட்டை ரவி, கிரேன் மனோகர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் ஹீரோ அமித் பார்கவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். தற்போது படத்தின் பாடல் பதிவு நடந்து வருகிறது. ‘கத்தி’ படத்தில் ‘ஆத்தி…’ பாடலை பாடிய விஷால் தட்லானி மற்றும் ஸ்ரேயா கோஷல் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை பாடியுள்ளனர்.

‘மிருதன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று அக்டோபர் மாதம் இறுதியில் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைகிறது. ‘மிருதன்’ படத்தில் புகைப்பிடிப்பது மாதிரியாக, குடிப்பது மாதிரியாக எந்த காட்சிகளும் இருக்காதாம். இந்த படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ‘வடகறி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.வெங்கடேஷ் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;