சங்கத்தின் முடிவில் நியாமில்லை! - அருண்பாண்டியன்

சங்கத்தின் முடிவில் நியாமில்லை! - அருண்பாண்டியன்

செய்திகள் 3-Sep-2015 12:39 PM IST VRC கருத்துக்கள்

‘பாயும் புலி’ பட ரிலீஸ் பிரச்சனை தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நாளை முதல் (4-9-2015) எந்த படமும் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்துள்ளார்கள்! இந்நிலையில் ‘பாயும் புலி’ படத்துடன் நாளை (4-9-2015) ரிலீசாக இருக்கும் ‘சவாலே சமாளி’ பட ரிலீஸ் குறித்து பேச அதன் தயாரிப்பாளர்கள் அருண் பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் இருவரும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அருண்பாண்டியன் கூறிய விவரம் வருமாறு:
‘சவாலே சமாளி’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் 170-க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும். படத்தை திடீரென்று நிறுத்த முடியாது. ஏன் என்றால் பல கோடி ரூபாய் செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைய விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளது. நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும்! இதனால் கண்டிப்பாக திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனை ஏற்படும்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ‘லிங்கா’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான் தான்! அந்த வகையில் நானும் கடுமையாக பதிக்கப்பட்டேன். அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள். ஆனால் அதையும் செய்யவில்லை. செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது தவறானது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;