சூர்யா, ஹரியுடன் 2வது முறையாக இணையும் ஸ்ருதிஹாசன்!

சூர்யா, ஹரியுடன் 2வது முறையாக இணையும் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 3-Sep-2015 11:41 AM IST Chandru கருத்துக்கள்

தமிழில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் அறிமுகமான படம் ‘ஏழாம் அறிவு’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருப்பதை அவரே உறுதி செய்திருக்கிறார். ‘பூஜை’ படத்திற்குப் பிறகு சூர்யாவை வைத்து ‘சிங்கம் 3’ படத்தை இயக்கவிருக்கிறார் ஹரி. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவிருக்கும் இப்படம் குறித்த முதல்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சூர்யாவும் ‘24’ படத்தில் பிஸியாக இருப்பதால், அப்படம் முடிந்த பிறகு ‘சிங்கம் 3’ன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் சூர்யாவுடன், தான் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவ ‘சிங்கம் 3’ டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

‘பூஜை’யிலும் நாயகி ஸ்ருதிஹாசன்தான் என்பதால், இயக்குனர் ஹரி மற்றும் சூர்யாவுடன் 2வது முறையாக இணையும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ருதி. அதோடு ஒரே நேரத்தில் விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘தல 56’, சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ என மூன்று முன்னணி நாயகர்களின் படங்களிலும் ஹீரோயின் ஆகியிருப்பதால் ‘ஹாட்ரிக்’ உற்சாகத்திலிருக்கிறது ஸ்ருதி வட்டாரம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;