சலமான் கானை இயக்க தயாராகும் தனி ஒருவன் இயக்குனர்!

சலமான் கானை இயக்க தயாராகும் தனி ஒருவன் இயக்குனர்!

செய்திகள் 3-Sep-2015 11:43 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, அரவிந்த் சுவாமி, நயன்தாரா முதலானோர் நடிப்பில் ‘ஜெயம்’ ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான படம் ‘தனி ஒருவன்’. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம்! இதனால் இந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து நடிக்க அவர் தீர்மானித்துள்ளார் என்றும் அதை மோகன் ராஜாவே இயக்கவும் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு மொழி படங்களை இயக்கி வந்த மோகன் ராஜா இப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் புதிய டீசர் - வீடியோ


;