‘ஜிகர்தண்டா’ அசால்ட் சேதுவைத் தொடர்ந்து ‘மெட்ரோ’ குணா!

‘ஜிகர்தண்டா’ அசால்ட் சேதுவைத் தொடர்ந்து ‘மெட்ரோ’ குணா!

செய்திகள் 3-Sep-2015 10:25 AM IST Chandru கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேதுவாக நடிப்பில் அசத்தியிருந்தார் பாபி சிம்ஹா. அதோடு இந்த கேரக்டர் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இப்படத்திற்குப் பிறகு தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் பாபி சிம்ஹா. அதில் ஒன்று ‘ஆள்’ பட இயக்குனரின் ‘மெட்ரோ’. தங்கத்தின் விலையை முன்னிறுத்தி இந்தியாவில் நடைபெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா மீண்டும் தாதாவாக நடிக்கிறார்.

அறிமுக நாயகன் சிரிஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ‘குணா’ என்ற நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் சிம்ஹா. இப்படத்தின் டிரைலர் சிம்பு, கௌதம் மேனன், ஜெயம் ரவி உள்ளிட்டோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட, அவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;