இனி படங்கள் ரிலீஸ் இல்லையா?

இனி படங்கள் ரிலீஸ் இல்லையா?

செய்திகள் 3-Sep-2015 9:03 AM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘பாயும் புலி’ படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே வாங்கி வெளியிட்ட ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றுகூறி ‘பாயும் புலி’ படத்திற்கெதிராக சில தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பாளர்கள் மிரட்டப்படுவதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி நாளை முதல் (செப்டம்பர் 4) இனி தமிழ்ப் படங்கள் எதையும் ரிலீஸ் செய்யப்போவதில்லை என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை...

‘‘செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீயசக்தியாக வேலை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். தங்களுக்கு ஒரு பெரும் தொகை தரவேண்டும் என்றும் அந்த தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04-09-2015 முதல் புதிய நேரடித் தமிழ்ப்படங்கள் மற்றும் மாற்று மொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும், மேலும் 11-09-2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ்த் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறாம்’’.

இதனால் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வரும் ‘பாயும் புலி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளிவருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;