‘இந்தியன்’ சுகன்யா வழியில் வேதிகா!

‘இந்தியன்’ சுகன்யா வழியில் வேதிகா!

செய்திகள் 3-Sep-2015 9:03 AM IST Chandru கருத்துக்கள்

‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கும் இயக்குனர் பிரபுதேவா, அதன் மூலம் மூன்று நேரடித் தமிழ்ப் படங்களை தயாரிக்கவிருப்பதையும், அதில் ஒரு படத்தில் நடிகை வேதிகா நடிக்கவிருப்பதையும் ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். ‘விநோதன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில், அரசியல்வாதி ஐசரி வேலனின் பேரன் வருண் நாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் டிராமாவாக உருவாகவிருக்கும் இந்த ‘விநோதன்’ படத்தில் நாயகி வேதிகாவுக்கு விநோதமான வேடமாம். ஆம்... இப்படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கும் வேதிகா ஒரு சில காட்சிகளில் 60 வயதுப் பெண்மணியாகவும் நடித்திருக்கிறாராம். அதாவது ‘இந்தியன்’ படத்தில் நடிகை சுகன்யா நடித்ததுபோல. ஆனால், வேதிகாவின் இந்த கேரக்டருக்காக ஸ்பெஷல் மேக்&அப் ஆர்ட்டிஸ்டையெல்லாம் வரவழைக்கப் போவதில்லையாம்... விக்கும் போடப்போவதில்லையாம். இம்மாத இறுதியில் ‘விநோதனி’ன் படப்பிடிப்பு துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;