அருண் விஜய் அடுத்த அவதாரம்!

அருண் விஜய் அடுத்த அவதாரம்!

செய்திகள் 2-Sep-2015 1:21 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ விக்டராக தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற அருண் விஜய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். ஆம்... ஹீரோ, வில்லன் என நடிகராக ஜொலித்த அருண் விஜய் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் அருண் விஜய் துவங்கியுள்ள இந்த புதிய பட நிறுவனம் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கிறார்.

அருண் விஜய் நடித்திருக்கும் ‘வா டீல்’ படம் இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘புரூஸ் லீ’ படத்திலும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் சக்ரவியூகா படத்திலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அருண் விஜய்.

தயாரிப்பாளர் அருண் விஜய் பல ஹிட் படங்களைத் தயாரிக்க வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;