ஜீவா படத்திற்கு ரஜினி படத்தலைப்பு?

ஜீவா படத்திற்கு ரஜினி படத்தலைப்பு?

செய்திகள் 2-Sep-2015 12:36 PM IST Chandru கருத்துக்கள்

திருநாள், கவலை வேண்டாம் படங்களைத் தொடர்ந்து ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ இயக்குனர் ராம் பிரகாஷின் புதிய படமொன்றிலும் நடிக்க இருக்கிறார் ஜீவா. ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு, ரஜினியின் பிரபல டைட்டிலான ‘போக்கிரி ராஜா’வை படத்தலைப்பாக வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

1982ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ‘போக்கிரி ராஜா’வை தயாரித்த ஏவிஎம்&மிடம் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே குரு சிஷ்யன், முரட்டுக்காளை, மாப்பிள்ளை, பாயும் புலி என ரஜினியின் பிரபல படத்தலைப்புகள் தமிழ் சினிமாவில் இரண்டாவது முறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;