‘என்னை அறிந்தால்’ வழியில் ‘தல 56’ வியாபாரம்!

‘என்னை அறிந்தால்’ வழியில் ‘தல 56’ வியாபாரம்!

செய்திகள் 2-Sep-2015 11:49 AM IST Chandru கருத்துக்கள்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் வியாபார வேலைகள் இப்போதே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்கள் அடுத்த மாதம் வெளிவரவிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை லதீஃப் புரெடாக்ஷன் மற்றும் எம்.கே. என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அதேபோல் மதுரை, திருநெல்வேலி&கன்னியாகுமரி, திருச்சி&தஞ்சாவூர், கோவை, சேலம் ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை சுஸ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களே ‘என்னை அறிந்தால்’ படத்தின் விநியோக உரிமையையும் கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரி, வடஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமையை ‘பாண்டிச்சேரி’ சுரேஷ் (சண்முகா ஃபிலிம்ஸ்) என்பவர் கைப்பற்றியிருக்கிறார். மேற்கண்ட வியாபாரங்கள் அனைத்தும் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் வெளி மாநில, வெளிநாடு விநியோக உரிமைகளின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;