விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 2-Sep-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கும் ‘பாயும் புலி’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகவிருக்கின்றது. இப்படத்தை ‘வேந்தர் மூவீஸ்’ எஸ்.மதன் தயாரித்துள்ளார். இதே நிறுவனம், திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருக்கிறது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பாயும் புலி படத்தின் இடைவேளையில் ‘ரஜினி முருகன்’ படத்தின் டிரைலரை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது இந்நிறுவனம்.

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருக்கும் இந்த டிரைலர் மொத்தம் 146 வினாடிகள் ரன்னிங் டைமில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் நாளை நள்ளிரவு 12 மணியளவில் யு டியூப்பிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி முருகன் திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் பட காட்சிகள்


;