‘கத்தி’ தயாரிப்பாளர் கையில் தனுஷ் படங்கள்!

‘கத்தி’ தயாரிப்பாளர் கையில் தனுஷ் படங்கள்!

செய்திகள் 2-Sep-2015 10:52 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த ‘கத்தி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’. தற்போது இந்நிறுவனம் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டு புதிய படங்களின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ் நடிக்கும் ‘விசாரணை’ ஆகிய இரண்டு படங்களையும் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும்தான் தற்போது வாங்கியிருக்கிறது ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’.

‘நானும் ரௌடிதான்’ படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விசாரணை’ பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;