‘புலி’ வில்லனுக்கு சர்ப்ரைஸ் தந்த கே.எஸ்.ரவிகுமார்!

‘புலி’ வில்லனுக்கு சர்ப்ரைஸ் தந்த கே.எஸ்.ரவிகுமார்!

செய்திகள் 2-Sep-2015 10:32 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ வேலைகளை முடித்துவிட்டு, கே.எஸ்.ரவிகுமாரின் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் ‘கன்னட சூப்பர்ஸ்டார்’ சுதீப். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் சுதீபுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘முடிஞ்சா இவன புடி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று (செப்டம்பர் 2) ஹீரோ சுதீப்பின் பிறந்தநாள் என்பதால், ‘முடிஞ்சா இவன புடி’ படப்பிடிப்பு தளத்திலேயே சர்ப்ரைஸாக சுதீப் பிறந்தநாளை கேக் வெட்ட வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். 41 வயதைக் கடந்து 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார் சுதீப்.

கன்னட சூப்பர்ஸ்டாருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அய்யா உருவான விதம் - சீதக்காதி


;