அண்ணன் தனுஷுக்கு ஜோடியாகும் லக்ஷ்மிமேனன்?

அண்ணன் தனுஷுக்கு ஜோடியாகும் லக்ஷ்மிமேனன்?

செய்திகள் 1-Sep-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘காக்கிச்சட்டை’ இயக்குனர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதோடு இரண்டு நாயகிகளில் ஒருவராக ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிப்பதையும் ட்வீட் மூலம் உறுதிசெய்திருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தில் நடிக்கும் இன்னொரு நாயகிக்கான வேட்டையில் முதலில் பாலிவுட் நடிகை வித்யாபாலனின் பெயர் அடிபட்டது. ஆனால், அவருடைய கால்ஷீட் ஒத்துவராத நிலையில், தற்போது அந்த கேரக்டருக்காக லக்ஷ்மிமேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் அண்ணன், தம்பியாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி லோக்கல் பாயாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. தம்பி தனுஷுக்கு ஜோடிதான் ஷாமிலியாம். இதனால் லக்ஷ்மிமேனன் அண்ணன் தனுஷுக்கு ஜோடியாகலாம் என்கிறார்கள். அக்டோபரில் துவங்கி டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;