‘லிங்கா’ சர்ச்சை சிங்காரவேலன் மீது போலீஸில் புகார்!

‘லிங்கா’ சர்ச்சை சிங்காரவேலன் மீது போலீஸில் புகார்!

செய்திகள் 1-Sep-2015 10:04 AM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ பட வெளியீட்டிற்குப் பிறகு எழுந்த பிரச்சனைகளின்போது பத்திரிகைகளில் அதிகம் பேசப்பட்டவர் விநியோகஸ்தர் சிங்காரவேலன். தற்போது ‘பாயும் புலி’ பட வெளியீட்டிற்கு எதிராகவும் சிங்காரவேலன் பிரச்சனைகள் செய்வதாகக் கூறி போலீஸிடம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...

‘‘வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் எஸ்.மதன் தயாரித்து செப்டம்பர் 4ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் புலி. இத்திரைப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ‘லிங்கா’ திரைப்பட வெளியீட்டு வகையில் தனக்கு சேரவேண்டிய தொகையைப் பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன், மேலும் தனக்கு தொகை வேண்டுமென மிரட்டி ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கூறி வருகிறார். ஆகையால், தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியும், பொதுமக்களுக்கு மேற்கண்ட திரைப்படம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியும் வரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;