2014ல் நான்கு, 2015ல் நான்கு : அசத்தும் அனிருத்!

2014ல் நான்கு, 2015ல் நான்கு : அசத்தும் அனிருத்!

செய்திகள் 1-Sep-2015 9:58 AM IST Chandru கருத்துக்கள்

10 படங்களுக்கு மட்டுமே இதுவரை இசையமைத்துள்ளார் அனிருத். ஆனால், அதற்குள்ளாகவே தமிழ்சினிமாவின் ‘மோஸ்ட் வான்டட் மியூசிக் டைரக்டர்’ ஆகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வருடம் ஏற்கெனவே வெளிவந்த ‘மாரி’ ஆல்பத்தைத் தொடர்ந்து மேலும் 3 புதிய படங்களின் பாடல்களும் அனிருத் இசையமைப்பில் வெளிவரவிருக்கின்றன. அந்த மூன்று ஆல்பங்களுமே மிக முக்கியமானவை.

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதத்திலும், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘தல 56’ ஆல்பம் அக்டோபரிலும், தனுஷ் & வேல்ராஜ் கூட்டணியின் ‘விஐபி 2’ படத்தின் பாடல்கள் நவம்பரிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடல்கள் மட்டுமின்றி இந்த 3 படங்களுமே இந்த வருடத்திற்குள்ளாகவே வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதால், மாரி படத்தையும் சேர்த்து 2015ல் 4 படங்கள் அனிருத்தின் இசையில் வெளியாகிவிடும். கடந்த 2014ஆம் ஆண்டும் அனிருத்தின் இசையமைப்பில் 4 படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;