ஆர்.கே.செல்வமணியுடன் மோதும் ஆர்.கே.!

ஆர்.கே.செல்வமணியுடன் மோதும் ஆர்.கே.!

செய்திகள் 31-Aug-2015 12:46 PM IST VRC கருத்துக்கள்

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்.கே.யும், ஷாஜி கைலாஸும் இணையும் மூன்றாவது படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இந்த படத்தில் நீத்து சந்திரா பிரதான கதாநாயகியாக நடிக்க, கோமல் சர்மா, இனியா, சுஜா வாருன்னி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் சண்டை காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் ஆர்.கே. இதற்காக நியூயார்க்கில் உள்ள க்ரீன்பாயின்ட், ப்ருக்லீன் ஆகிய இடங்களில் உள்ள ஹாலிவுட் ஸ்டன்ட் புரொஃபஷனல் மையங்களுக்குச் சென்று 15 நாட்கள் சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஆர்.கே.

இப்படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி நடிக்கிறார். சமீபத்தில் ஆர்.கே.யும், ஆர்.கே.செலவமணியும் பயங்கரமாக மோதும் அதிரடி சண்டை காட்சியை மிகப் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளனர். கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில் எடுக்கப்பட்ட இந்த சண்டை காட்சிகாக ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் தவிர ஆறு கேமராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.யின் ‘மக்கள் பாசறை’ நிறுவனம் சார்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;