சத்தமில்லாமல் ‘சைக்கிள் புரட்சி’ செய்யும் ஆர்யா!

சத்தமில்லாமல் ‘சைக்கிள் புரட்சி’ செய்யும் ஆர்யா!

செய்திகள் 31-Aug-2015 12:31 PM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு வகையில் தங்களது ரசிகர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களது ரசிகர்களை சமூகப்பணிகளில் ஈடுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால், நடிகர் ஆர்யா இதில் வித்தியாசமானவர். தன் ஆரோக்கியத்திற்கும், ஃபிட்னஸிற்கும் முக்கியக்காரணமாக இருக்கும் ‘சைக்கிள் ஓட்டுவதை’ தன்னுடைய ரசிகர்களும் பின்பற்றும் வகையில் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தினந்தோறும் அதிகாலை 3.30 மணி முதல் 7.00 மணி வரை கிட்டத்தட்ட 100 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்யும் ஆர்யா, இதற்காக தனியாக பெரிய குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்த குரூப்பில் சேரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

ஆர்யாவை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளும் பல ரசிகர்கள் தற்போது புதிய சைக்கிளை வாங்கி, தாங்களும் பயணம் செல்வதை வாடிக்கையாக்கி வருவதாக ஆர்யாவிடம் ட்விட்டரில் தெரிவித்த வண்ணமுள்ளனர். இதனை ஆர்யாவும் வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சுற்றுப்புறத் தூய்மைக்கும், ஆரோக்கியமான உடலமைப்பிற்கும் பேருதவி செய்யும் மிதிவண்டி பயணத்தை, ஆர்யா மூலமாக பல ரசிகர்களும் பின்பற்றி வருவதால் சத்தமில்லாமல் ஒரு ‘சைக்கிள் புரட்சி’யே நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம்.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டில் நடந்த சைக்கிள் பந்தயம் ஒன்றில் 300 கி.மீ. தூரத்தைக் கடந்து பரிசை வென்ற ஆர்யா, விரைவில் ‘இரும்பு மனிதன்’ என்ற பட்டத்தை வெல்லவும் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த ‘அயர்ன்மேன் டிரைலத்தான்’ போட்டியின்படி இதில் கலந்துகொள்ளும் வீரர்கள், 3.8 கி.மீ. தூரம் நீச்சலடித்து, 180.2 கி.மீ. தூரம் சைக்களில் சென்று அதன்பிறகு 42.2 கி.மீ. தூரம் ஓடி போட்டியை நிறைய செய்ய வேண்டும். இந்தப் போட்டிக்காக தற்போது கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆர்யா. லேட்டஸ்ட்டாக இந்த ‘இரும்பு மனிதன்’ பட்டத்தை வென்றவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் (பச்சைக்கிளி முத்துச்சரம் பட வில்லன்).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;