அஜித்தால் மாறிய பட தலைப்பு!

அஜித்தால் மாறிய பட தலைப்பு!

செய்திகள் 31-Aug-2015 12:11 PM IST VRC கருத்துக்கள்

‘டெய்சி’ என்ற பெயரில் உருவாகி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பெயர் மாற்றத்துடன் தயாராகியுள்ள படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இருவரும் சேர்ந்து டிரைலரை வெளியிட்டனர். ஹாரர் பட வரிசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தீபக் பரமேஷ், குணாலன், ஜாக்லின் பிரகாஷ், குழந்தை நட்சத்திரம் அனு, மோர்ணா ஆனிதா ஆகிய புதுமுகங்களுடன் ‘மைம்’ கோபி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவில் சினிமா கற்று வந்த ஸ்ரீநாத் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாஸ்’ படத்தில் ஸ்ரீநாத்தின் பங்கும் இருந்திருக்கிறது. இப்படத்தில் இலங்கையை சேர்ந்த சக்தி என்ற கேரக்டரில் வரும் சூர்யாவுக்கு இலங்கை தமிழில் பேசவும், அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட மேனரிசங்களை சொல்லிக் கொடுத்தவர் இந்த ஸ்ரீநாத் தானாம்! இதனை வெங்கட் பிரபு தெரிவித்தார்.

இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீநாத் பேசும்போது, ‘‘இப்படம் ‘டெய்சி’ என்ற பெயரில் உருவாகும்போது நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம். ஆனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனத்தை சேர்ந்த மகேஷ் படத்தை பார்த்துவிட்டு, ‘‘டெய்சி’ என்ற டைட்டில் இந்த கதைக்கு பொருந்தவில்லை. இந்த டைட்டில் ஆங்கில படத்தை குறிப்பது மாதிரி இருக்கிறது, படத்தில் நிறைய இடங்களில் வருகிற வசனமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்பது இந்த கதைக்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்றார். அது மட்டுமல்லாமல் அவரும், நானும், இப்படத்தில் பணியாற்றியுள்ள பெரும்பாலானவர்கள் அஜித் சார் ரசிகர்கள்! அதனால் அஜித் படப்பாடல் வரியில் அமைந்த இந்த டைட்டில் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது. அதனால இந்த டைட்டிலை வைத்தோம். டைட்டிலை மாற்றி வைத்ததும் படத்திற்கு ஏற்பட்ட எல்லா தடங்கல்களும் விலகி பட வேலைகள் விறிவிறுப்பாக நடைபெற்று படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இப்படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

இசைக்கு சிவ சரவணன், படத்தொகுப்புக்கு ஹரிஹரன், தயாரிப்புக்கு ஷண்முக சுந்தரம் என புதுமுகங்கள் கூட்டணி அமைத்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஹாரர் விருந்தாக அமையுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;