சென்னைக்கு பிறகே மலேசியா : ‘கபாலி’ பிளான்

சென்னைக்கு பிறகே மலேசியா : ‘கபாலி’ பிளான்

செய்திகள் 31-Aug-2015 11:59 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தை ‘கபாலி’தான். ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படம் குறித்த செய்திகள்தான் தற்போது இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் ஆக்ரமித்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் ‘கபாலி’க்காக வித்தியாசமான தோற்றத்தில் ரஜினி கலந்துகொண்ட ஃபோட்டோஷூட் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

‘கபாலி’யின் முதல் ஷெட்யூல் மலேசியாவில் துவங்கும் என ஆரம்பத்தில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், விநாயகசதுர்த்தி முதல் படப்பிடிப்பிற்கான பிள்ளையார்சுழியை சென்னையில்தான் போடவிருக்கிறார்களாம். சென்னையைத் தொடர்ந்து மலேசியாவில் 2வது ஷெட்யூலை திட்டமிட்டிருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘கபாலி’க்காக சூப்பரான பாடல்களும் இன்னொருபுறம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. படம் 2016 தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;