அஜித், யுவன் ரசிகர்களின் இரட்டை கொண்டாட்டம்!

அஜித், யுவன் ரசிகர்களின் இரட்டை கொண்டாட்டம்!

செய்திகள் 31-Aug-2015 11:16 AM IST Chandru கருத்துக்கள்

இந்த நாளை (ஆகஸ்ட் 31) அஜித் ரசிகர்களும், யுவனின் ரசிகர்களும் நிச்சயமாக எந்நாளும் மறக்க மாட்டார்கள். காரணம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படம் தமிழ்சினிமாவின் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்த படம். விநாயக் மகாதேவ் தவிர இப்படத்தில் அனைவருக்கும் பிடித்த இன்னொரு விஷயம் யுவனின் இசை. பாடல்கள் சூப்பர்ஹிட் ரகமென்றால், யுவனின் மாஸ் பிஜிஎம் பிளாக்பஸ்டர் வகையறா.

‘மங்காத்தா’ வெளியாகி நான்காவது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களோடு, தங்கள் நாயகன் யுவனின் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் யுவன் ரசிகர்கள். ஆம்... யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளும் இன்றுதான்.

வாழ்த்துக்கள் யுவன்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;