‘தற்காப்பு’க்காக 20 கிலோ எடை குறைத்த சக்தி வாசு!

‘தற்காப்பு’க்காக 20 கிலோ எடை குறைத்த சக்தி வாசு!

செய்திகள் 31-Aug-2015 11:10 AM IST Chandru கருத்துக்கள்

தனக்கான ‘டர்னிங் பாயின்ட்’டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ சக்தி வாசு. அது ‘தற்காப்பு’ படம் மூலம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை இப்படத்திற்காக கொட்டியிருக்கிறார். கினெடாஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தற்காப்பு’ படத்தை இயக்கி வருகிறார் ஆர்.பி.ரவி. இயக்குனர் வாசுவின் மகன் சக்தி, இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘எங்கேயும் எப்போதும்’ வத்சன் சக்ரவர்த்தி, ‘மானாட மயிலாட’ சதீஷ் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.

வித்தியாசமான போலீஸ் படமாக உருவாகிவரும் ‘தற்காப்பு’க்காக 90 கிலோ இருந்த சக்தி வாசு, 20 கிலோ எடை குறைத்து 70 கிலோ உடம்புடன் ‘ஃபிட்’டாகி இருக்கிறார். போலீஸ், மாஃபியா என இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறாராம் சக்தி. அதோடு க்ளைமேக்ஸ் காட்சி ஒன்றிற்காக ஏழாவது மாடியிலிருந்து குதித்து ரிஸ்க் எடுத்திருக்கிறாராம்.

இப்படம் செப்டம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;