படப்பிடிப்புக்கு ‘குட்பை’ சொல்லும் ‘10 எண்றதுக்குள்ள’

படப்பிடிப்புக்கு ‘குட்பை’ சொல்லும் ‘10 எண்றதுக்குள்ள’

செய்திகள் 31-Aug-2015 10:36 AM IST Chandru கருத்துக்கள்

டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கிறது விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’. சென்னையில் தொடங்கி நேபாளம் வரை பயணித்து இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த வாரம் ராஜஸ்தானில் படபிடிப்பை நடத்திய இயக்குனர் விஜய்மில்டன் இன்று சென்னையில் இறுதிநாள் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார். ‘10 எண்றதுக்குள்ள’ படப்பிடிப்பு நிறைவுபெறுவதால் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினரை பிரிய வேண்டியதை நினைத்து ஃபீலிங் ட்வீட் போட்டிருக்கிறார் நடிகை சமந்தா.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து செப்டம்பரில் டி.இமான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை வெளியிடவிருக்கின்றனர். படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;