நவம்பரில் வெளியாகிறது சிம்பு படம்!

நவம்பரில் வெளியாகிறது சிம்பு படம்!

செய்திகள் 29-Aug-2015 4:43 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதன் முதலாக இப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இசைக்கும், பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பட வேலைகளை இன்னும் வேகப்படுத்தியுள்ளனர் இப்படக்குழுவினர். இந்த படம் தவிர சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் வேலைகளும் இறுதிகட்டதை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;