பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்!

பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்!

செய்திகள் 29-Aug-2015 11:42 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷாலுக்கு இன்று (29-8-2015) பிறந்த நாள்! தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் விஷால் ஏழை எளிய மக்களுக்கு தன்னாலியன்ற உதவிகளை செய்து வருகிறார். இந்த வருட பிறந்த நாளையொட்டி சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் நிறுவனமான ஈழ ஏதிலியார் மறுவாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கினார். அத்துடன் மழலையர் பள்ளி குழந்தைகள் முறுவாழ்வு மையங்களை தொடர்ந்து நடத்துவதற்கான ஒரு மாத செல்விற்கான பணம் 1,65,000 ரூபாயும் வழங்கினார் விஷால்! இது குறித்து பேசும்போது,

‘‘ஒரு உதவி செய்யும் நபராக இருப்பதை காட்டிலும் ஒரு நல்ல காரியத்திற்காக மக்கள் தங்களாகவே முன் வந்து இதில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். நமது சமுதாயத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு உதவி செய்ய இளம் தலைமுறையினரிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அது தான் என் நோக்கம். நான் செய்கிற இந்த சிறு உதவிகளை பார்த்து இன்னும் நிறைய பேர் இதுபோன்ற உதவிகளை செய்யுமானால் அது ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கு அளிக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். அதிலும் அப்துல் கலாமின் கனவான கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமானால் இந்த சமூகம் நல்ல நிலைக்கு உயர அதிக வாய்ப்பு இருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இந்த உதவிகள் வழங்கியதில் எனது ரசிகர் மன்றத்தினருக்கும் நிறைய பங்கு உண்டு’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;