‘ஜெயம்’ பிரதர்ஸின் தொடரும் வெற்றிக் கூட்டணி!

‘ஜெயம்’ பிரதர்ஸின் தொடரும் வெற்றிக் கூட்டணி!

செய்திகள் 29-Aug-2015 10:40 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நிச்சயம் இது ஒரு புதிய சாதனைதான். அண்ணன் இயக்கத்தில் தம்பி நடித்து இதுவரை 6 படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் 5 படங்கள் சூப்பர்ஹிட். இந்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் இந்த கூட்டணி தனது வெற்றிக்கணக்கை தமிழில் துவங்கியது. அதன்பிறகு ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தனர். இந்த கூட்டணியின் 5வது படமான ‘தில்லாலங்கடி’ மட்டுமே ஆவரேஜ் ரகம்.

இந்த வெற்றிக்கூட்டணியின் 6வது படமாக நேற்று வெளிவந்திருக்கிறது ‘தனி ஒருவன்’. ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருக்கும் இப்படத்திற்கும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு விமர்சகர்களிடத்திலும் ‘தனி ஒருவனு’க்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால் இப்படமும் கண்டிப்பாக இந்த கூட்டணியின் வெற்றிப்பட்டியலில் இடம் பிடிக்கும் என்கிறார்கள்.

மேலும் பல சாதனைகள் படைக்கட்டும் இந்த ‘சக்சஸ்’ பிரதர்ஸின் கூட்டணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;