ஜீவா படத்தில் ‘ஜில்லா’ நாயகி!

ஜீவா படத்தில் ‘ஜில்லா’ நாயகி!

செய்திகள் 29-Aug-2015 10:26 AM IST Chandru கருத்துக்கள்

‘யாமிருக்க பயமே’ படத்தைத் தொடர்ந்து ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், டீகே இயக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. ஜீவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி, இன்னொருவர் ‘இது என்ன மாயம்’ கீர்த்தி சுரேஷ். ஜீவா, கீர்த்தி புகைப்படங்களுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில், ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் தருவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறி, கீர்த்தி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளாராம். இதனால் ஜீவாவுக்கு ஜோடியாக தற்போது காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே விஜய், காஜல் அகர்வால் நடித்த ‘ஜில்லா’ படத்தின் பாடல் ஒன்றில் நடனமாடியிருக்கிறார் ஜீவா. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘திருநாள்’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் முதல் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் ஜீவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டீசர்


;