‘பசங்க-2’வாக மாறியது சூர்யாவின் ‘ஹைக்கூ’

‘பசங்க-2’வாக மாறியது சூர்யாவின் ‘ஹைக்கூ’

செய்திகள் 28-Aug-2015 5:38 PM IST Chandru கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஹைக்கூ’ படத்தின் தலைப்பை வரிச்சலுகைக்காக மாற்ற இருக்கிறோம், நல்ல பெயரைச் சொல்லுங்கள் என படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் ஒருசில நாட்களுக்கு முன்பு கேட்டிருந்தார். தற்போது படத்தின் பெயரை தன் முதல் படமான ‘பசங்க’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதைப்போல் ‘பசங்க&2’ என்று வைத்திருக்கிறார்கள். ‘பசங்க-2’ என்ற டைட்டிலுக்குக் கீழே ‘ஹைக்கூ’ என்ற ஆங்கில வார்த்தையும் போடப்பட்ட போஸ்டரையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

சூர்யா, அமலாபால் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவையும், ‘பிசாசு’ அரோல் கொரேலி இசையமைப்பையும் கவனிக்கிறார்கள். படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. படம் அக்டோபரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;