50-ஆவது நாளில் ‘பாகுபலி’

50-ஆவது நாளில் ‘பாகுபலி’

செய்திகள் 28-Aug-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலேயே அதிக வசூலை குவித்த படம் ‘பாகுபலி’ என்று சில புள்ளி விவர கணக்குகள் கூறுகிறது. கடந்த மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய திரையுலகினர் என்றில்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த இந்த பிரம்மாண்ட படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ள நிலையில் இப்படம் 100 நாட்களையும் தாண்டி ஓடி மேலும் பல சாதனைகள் படைக்கும் என்பது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;