ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 28-Aug-2015 11:08 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடித்துள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படம் நேற்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நிறைய காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு ‘ஏ’ சர்டிஃபிக்கெட் தான் வழங்கியிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து, ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;